×

ஆசிய சாதனை புத்தகத்தில் வசந்த குமாரி!

ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநரான கன்னியா குமரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த குமாரிக்கு ஆசிய சாதனை புத்தக சான்றிதழை ஆட்சியர் தர் வழங்கி கௌரவித்துள்ளார். வசந்தகுமாரி தனது 34-வது வயதில் 30.3.1993 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பணியேற்றார். 24 ஆண்டுகள் அரசு போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றினார். 30.4.2017 அன்று பணி ஓய்வு பெற்றார். வசந்தகுமாரி திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம் வழித் தடங்களில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார்.

தனி மனித சாதனையாக ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் 24 ஆண்டு கால பணியில் எவ்வித விபத்துகளும் ஏற்படுத்தாமல் பணியாற்றிய காரணத்துக்காக சிறந்த ஆசிய சாதனைகள் புத்தகம் விருது வழங்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி கலந்துகொண்டார். இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே இவர்தான் முதல் பெண் ஓட்டுநர் என இத்தனை வருடங்கள் கழித்தும் கூட அவருக்கான அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. இவர் கமல் ஹாசன்’ தயாரிப்பில் வெளியான ‘மகளிர் மட்டும்’ படத்திலும் கூட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.

The post ஆசிய சாதனை புத்தகத்தில் வசந்த குமாரி! appeared first on Dinakaran.

Tags : Spring Kumari ,Kannya Kumari district ,Asia ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…